ஸ்மிரிதி இரானி ரோகித் அபாண்ட பொய் சொல்கிறார் எனது மகன் ரோகித் வெமுலாவின் சாவு பற்றி - தாயார் பேட்டிஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா பற்றி 2 நாட்களுக்கு முன்பு டெல்லி மேல்–சபையில் மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானி பேசினார். அப்போது அவர், ‘வெமுலாவின் உயிர் பிரிவதற்கு முன்புவரை அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்ல எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. அந்த இடத்தில் கூடி இருந்தவர்கள் எந்த டாக்டரையும் வர அனுமதிக்கவில்லை’ என்று கூறி இருந்தார்.

 

தற்போது தனது மற்றொரு மகன் ராஜாவுடன் டெல்லியில் தங்கியிருக்கும் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா இதுபற்றி நிருபர்களிடம், ‘‘எனது மகன் சாவு பற்றி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பாராளுமன்றத்தில் அபாண்டமாக பொய் சொல்கிறார். அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும். வெமுலாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய மந்திரிகளுக்கும், துணைவேந்தருக்கும், மற்றவர்களுக்கும் ஆயுள்தண்டனையை விடவும் அதிக தண்டனை வழங்கவேண்டும். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றையும் அமைக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

 

அவருடைய மகன் ராஜா, ‘சம்பவ இடத்துக்கு நாங்கள் சென்ற நேரத்தில் எனது சகோதரரின் உடல் அருகே போலீசாரும், டாக்டர்களும் இருந்தனர்’ என்று குறிப்பிட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.