ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம்-சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லைமக்களவையில் இன்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் ரெயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு எதுவும் இடம்பெறவில்லை. பட்ஜெட்டை தாக்கல் செய்து சுரேஷ் பிரபு பேசுகையில், பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் மாற்று வழியில் ரெயில்வேக்கு நிதி திரட்ட வழிவகை செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறினார்.

மேலும், இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

முன்பதிவு அல்லாத பெட்டிகளிலும் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி செய்யப்படும். ரெயில்வேக்களில் சுமை தூக்குவோர் இனி உதவியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

ரெயில் பயணிகளின் பொழுது போக்கிற்காக ரெயில் பெட்டிகளில் பண்பலை வானொலி வசதி செய்யப்படும். நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 20 ஆயிரம் தகவல் பலகைகள் அமைக்கப்படும்.

ரெயில்வே தொடர்பு எண் 139-ஐ தொடர்பு கொண்டு முன் பதிவு டிக்கெட்டை ரத்து செய்யலாம். பயணச்சீட்டின் முன்பதிவின் போது பயணக் காப்பீட்டிற்கான வாய்ப்பு வழங்கப்படும். ரெயிலில் செல்லும் பயணிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு வழங்கப்படும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.