ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஆபத்தா ?ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்படுத்தியால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 493.50 கோடி நஷ்ட ஈடு வழங்க, அந்த நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிர்மிக்காம் பகுதியை சேர்ந்த ஜாக்குலின் என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் முகப்பவுடர் மற்றும் ஷவர் டு ஷவர் பவுடர்களை பயன்படுத்தி வந்தார். இதனால் அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாக்குலின் மரணமடைந்தார்.

 

இதற்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனமே காரணமென்று ஜாக்குலினின் உறவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க தவறிவிட்டது என தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ. 493.50 கோடி ஆகும்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்த இந்திய பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

 

பவுடர் பயன்படுத்தும் பெண்கள் அனைவருக்கும், கர்பப்பை புற்றுநோய் வருவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், பிறப்புறுப்புகளில் பவுடர் பயன்படுத்தும் போது, அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

ஜான்சன் & ஜான்சன் பவுடரை தங்கள் குழந்தைக்கு பயன்படுத்தும் சூழலில், இந்திய பெண்கள் மத்தியில் புற்றுநோய் குறித்த அச்சம் இயல்பாக ஏற்பட்டுள்ளது. எனவே, உண்மை நிலையை வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது.

 

அண்மையில் மேகி நிறுவனத்தின் நூடூல்ஸில் உடலுக்கு கேடு விளைவிக்கும் காரீயம் அதிகளவு கலந்திருப்பதாக வெளியான தகவலால் நாடு முழுவதும் சர்ச்சை எழுந்த நிலையில், அதன் விற்பனை தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி: நியூஸ் 7 தமிழ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.