பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கைஅடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்து அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பேரூராட்சி கூட்டம்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் அஸ்லாம், துணைத் தலைவர் பிச்சை, செயல் அலுவலர் முனியசாமி மன்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகம் மற்றும் குளங்கள், கட்டண கழிவறை, தினசரி மார்க்கெட் உள்ளிட்டவைகளை ஏலம் விடுவது தொடர்பாகவும், அவற்றுக்கு வைப்புத் தொகை நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், செயல் படுத்தும் திட்டங்கள் தொடர்பாகவும் பேச முடிவு செய்யப்பட்டது.

அப்போது 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் உம்மல்மர்ஜான், 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சபுரன்ஜெமீலா, 7-வது வார்டு¢ மனித நேய மக்கள் கட்சி கவுன்சிலர் ரபீக்கா, 19-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சவுதா ஆகியோர் தங்களது வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாகவும், இந்த வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடன்பாடு

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்மேனன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கவுன்சிலர்கன் கலைந்து சென்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.