பா.ம.க.வை நெருங்கும் பாரதிய ஜனதாதமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது அந்த கட்சி தலைவர்களுக்கே இன்னமும் புரியாத புதிராக இருந்துக் கொண்டு இருக்கிறது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை இழுப்பதற்காக பா.ஜ.க. தலைவர்கள் இது வரை மூன்று தடவை சந்தித்து பேசி விட்டார்கள். ஆனால் அவர் பிடி கொடுக்கவில்லை. தன்னை முதல்–மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் நிபந்தனை விதித்ததால் மேற்கொண்டு பா.ஜ.க. தலைவர்களால் பேச்சுவார்த்தை தொடர முடியாமல் போய்விட்டது.

அதுபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடமும் பா.ஜ.க. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.

பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி என்று ராமதாஸ் உறுதியாக இருந்ததால் பா.ஜ.க. தலைவர்கள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு நகர முடியவில்லை.

இதையடுத்து கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை பாரதிய ஜனதா மேலிடம் ஏற்றுக்கொண்டது. அதன்பேரில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜவ்டேகர் தே.மு.தி.க., பா.ம.க.விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தே.மு.தி.க. தரப்பில் இருந்து அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.க. தலைவர்கள் பா.ம.க.விடம் தற்போது பேச்சுவர்த்தையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவிக்கும் முடிவை பொறுத்து பாரதிய ஜனதா அடுத்த கட்ட முடிவை எடுக்க உள்ளது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் பா.ம.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைவது என்று கூறப்படுகிறது.

பா.ம.க.வும் பாரதிய ஜனதாவை சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஓரளவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. அந்த தொகுதிகள் அனைத்தையும் விட்டு கொடுக்க பா.ம.க. முன்வந்துள்ளது.

எனவே பா.ம.க. – பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா என்பது விஜயகாந்த் எடுக்கும் முடிவை பொறுத்து அமையும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.