பட்டுக்கோட்டையில் தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்த முடிவுபட்டுக்கோட்டையில் வரும் 27–ந் தேதி தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்துவது என்று தென்னை விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

தென்னை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சாமியப்பன் அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட தென்னை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் மத்திய கயிறு வாரிய உறுப்பினர் குருவிக்கரம்பை பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பா.பாலசுந்தரம், பி.ஆர்.நாதன், பழனிவேல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் வி.பி.பாலசுப்பிரமணியன், செயலாளர் கோடீஸ்வரன், பொருளாளர் செல்வராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜரெத்தினம், பேராவூரணி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

 

“2015–ம் ஆண்டு ஒரு தேங்காய் ரூ.12–ல் இருந்து ரூ.15 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.6–க்கு கூட தேங்காய் விற்கப்படவில்லை. கடந்த 5 வருடத்தில் உரம், நீர்பாசனம், தொழிலாளர் சம்பளம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் மத்திய அரசு விலை நிர்ணய கமிட்டி தேங்காய் விலையை ரூ.7 என நிர்ணயித்துள்ளது. மத்திய அரசு தேங்காய் கொப்பரைக்கு ரூ.120– என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழகத்தில் தென்னை நல வாரியத்தை மீண்டும் தொடங்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27–ந் தேதி(சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் பட்டுக்கோட்டை காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று பஸ் நிலையம அருகே தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.