ஜனாதிபதி உமர்(ரலி) அவர்களும் பணியாளரும் பாலஸ்தீன் நோக்கிய பயணம் செய்த போது நடந்த நெகிழ வைத்த ஒரு நிகழ்வு!உமர் பீன் கத்தாப் [ ரழி ] அவர்களின் ஆட்சிகாலத்தில் பாலஸ்தீன் யூதர்களிடம் இருந்து வெற்றி பெற்று மீண்டும் இஸ்லாமியர் கைவசம் வந்து விட்டது

அதன்  ஜனாதிபதியக உமர்   [ரழ ] ி  அவர்களானார். பாலஸ்தீன் வாசிகள் தங்களின் ஆட்சியாளர்உமர் அவர்களை பார்க்க ஆசைபட்டு ஆர்வத்தில் கிளர்ச்சி செய்தனர் இதையறிந்த உமர்அவர்கள் தனக்கு துனையாக பனியாளர் ஒருவரை அழைத்து கொண்டு பாலஸ்தீனம் புறப்பட்டு சென்றார்.

பயணத்தின் போது உமர் அவர்கள் ஒரு நிபந்தனை ஒன்றை விதித்தார் அதாவது ஒரு குறிப்பட்ட தூரம் வரை ஒட்டகத்தின் மேல் நான்அமர்ந்து வருவேன் பின்னர் நீர் அமர்ந்து வரும் இப்படியே மாறி மாறி சூழற்சி முறையில்பயணிக்க வேண்டும் என்றார் உமர் அவர்கள்.

 

பல நாட்கள் தொடர்ந்த இந்த பயணம் முடிவுக்கு வந்து விட்டது ஆம் பாலஸ்தீன் தேசஎல்லையை நெருங்கிவிட்டார்கள். எல்லையின் இரு மருங்கிலும்

உமரை வரவேற்க்கபெரும் கூட்டம் திரண்டிருந்தார்கள்.

உமர் அவர்கள் பாலஸ்தீன எல்லைக்குள் நுழையும் தருவாயில் உமர் அவர்களின் ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது உமர் அவர்கள் ஒட்டகத்தை விட்டு

இறங்கி பணியாளரிடம் கொடுத்தார். பணியாளரே இப்போது எல்லைக்குள் நுழைய இருக்கின்றோம் நீங்கள் தொடர்ந்து அமருங்கள் எனக் கூறினார் உமர் அவர்கள்.

அதற்கு பணியாளர் உமர் அவர்களை பார்த்துஅரசே மக்கள் பார்க்கும் போது தாங்கள் ஓட்டகத்தின் மேல் அமர்வதே சரி அதுவே முறையுமாகும் என்றார் அந்த பணியாளர்.

நீர் கூறுவது சரிதான் ஆனால் ஓட்டகத்தில் அரசனாக அமர்ந்து வருவதை விட வாக்கு
தவறாத இறைவனின் அடிமையாக இருக்கவே நான் என்றும் ஆசைபடுகிறேன் என்றார்உமர் பின் கத்தாப் அவர்கள்

 

.இது உன்னுடைய முறை சரி ஓட்டகத்தின் மீது அமர்ந்து கொள்ள என்று பணியாளர் ஓட்டகத்தின் மேல் அமர்ந்திருக்க ஓட்டகத்தை

பிடித்த படியே பாலஸ்தீனுக்குள் நுழைந்தார்உமர் பின் கத்தாப் அவர்கள்.

ஓட்டகத்தின் மேல் இருக்கும் பனியாளரை மன்னார் என நினைத்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திகைத்தனர்.

ஓட்டகத்தின் மேல் இருக்கும் பணியாளரைஅரசர் என நினைக்க சில காரணங்கள் இருந்தது அதாவது இதற்கு முன்னர் உமர் அவர்களை பாலஸ்தீன் மக்கள் கண்டதில்லை
மற்றுமொரு காரணம் தான் ஓட்டத்தில் இருக்கும் பணியாளரின் ஆடையில் மூன்று கிளிச்சால்கள் ஓட்டகத்தை பிடித்து வந்த உமர்
அவர்களின் ஆடையில் பதினாறு கிளிச்சல்கள் இருந்தன இத்தனை வைத்து அந்த மக்கள் பணியாளரை மன்னார் என நினைத்து
விட்டார்கள்.பணியாளர் ஓட்டகத்தின் மீது உமர் அவர் நடந்து வருவதை கண்ட இஸ்லாமிய தளபதி காலித் பின் வாலித் அவர் சற்டேன உரையில்
இருந்த வளை எடுத்து பணியாளரை வெட்டசென்றதற்கு உமர் அவர் வேண்டும் நிறுத்துங்கள் இது எனக்கும் அவருக்கும் உள்ளவகும் என தடுத்து விட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு தலைசிறந்த மன்னருக்கு குடிமக்களாக நாங்கள் இருப்பதற்கு மிகவும்பெருமையடைகிறோம் என்றார்கள் அந்ததேசத்து மக்கள்.

 

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..

 

உமரின் ஆட்சியைத்தான் மகாத்மா காந்தியும் விரும்பினார்கள் எனவே அவர் கூறினார்  ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.