திருவாரூரில் ஊர்தி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்திக்கு ஊர்தி உதவியாளர் பணியிடத்திற்கு நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு இன சுழற்சி முறைப்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்–முன்னுரிமையற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஊர்தி உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தோல்வியுற்றவராக இருத்தல் வேண்டும். ஊர்தி உதவியாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.5000 வழங்கப்படும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

வயது வரம்பு 1.7.15–ல் 18 முதல் 32 வயது வரை இருத்தல் வேண்டும். மேற்காணும் கல்வித் தகுதியுடையவர்கள் திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள திருவாரூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மேற்கூறப்பட்ட பணியின் பெயருடன் சுயவிவரக் குறிப்பு அதற்கான கல்விச் சான்றிதழின் நகல்களுடன் சாதிச் சான்று மற்றும் இதர சான்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், அறை எண்:6 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திருவாரூர் என்ற முகவரிக்கு வருகிற 15–ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.