தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் -- சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பாஜக தலைவர்கள்தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் உச்சத்தை அடைந்துள்ளன. இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எஸ்.மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா என கோஷ்டிகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.

 

இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்துள்ளனர். எந்த தலைவரைப் பற்றி அதிக பதிவுகள் வருகிறது? அதிக லைக்குள், கமெண்டுகள் யாருக்கு அதிகம் என்பதில் பாஜகவில் பெரும் போட்டியே நடக்கிறதாம்.

 

இது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்பி விடுகிறார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமனம் செய்துள்ளனராம். எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்களையும் இவர்கள் கண்காணிக்கப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

Thanks to THE HINDU-Tamil
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.