பால் விலையை உயர்த்தும் தனியார் நிறுவனங்கள்!தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

பால் கொள்முதல் விலை, மூலப் பொருள்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி, 2015-இல் தமிழகத்தில் 4 முறைக்கும் மேல் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. உற்பத்தி அதிகரிப்பை அடுத்து, விலையை சற்று குறைந்தன.

இந்த நிலையில், பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்துவதாக தனியார் பால் நிறுவனங்கள் போட்டி போட்டு அறிவித்து வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"ஹட்சன் ஆரோக்யா' நிறுவனம் ரூ.2 முதல் ரூ.5 வரையில் செவ்வாய்க்கிழமை முதல் உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, "கெவின்ஸ்' நிறுவனமும் சனிக்கிழமை காலை முதல் பாலுக்கான விற்பனை விலை உயர்வை ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்த்தியுள்ளது.

கொள்முதல் விலை உயர்வு என்ற பொய்யான காரணத்தைக் கூறி, விற்பனை விலையை தனியார் பால் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. தன்னிச்சையாக விலையை உயர்த்தும் எதேச்சதிகார போக்கு கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தும் முன், தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும் அவசர சட்டத்தை நடைபெறவுள்ள சட்டப் பேரவை இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெறும் என்றார் அவர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.