திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் பிணம்திருவாரூர், பிப். 16–

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

திருவாரூர் விளமலில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள வாய்க்காலில் சுமார் 48 வயது மதிப்புள்ள ஆண் பிணம் கிடந்தது.

பிணம் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. துர்நாற்றம் வீசியது. பிணமாக கிடந்தவர் கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதற்கான அடையாளம் இருந்தது.

கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் தான் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.

எனவே அங்கு சிகிச்சை பெற வந்தவர் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.