செந்தலைப்பட்டினத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் இலவச மருத்துவ முகாம் !அதிரை அருகேயுள்ள செந்தலைப்பட்டினத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் துவக்க தினத்தையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் செவ்வாய் அன்று பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.Photo 1

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இம் மருத்துவ முகாமிற்கு

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பைசல் தலைமை வகித்தார். மல்லிப்பட்டினம் கிளைத் தலைவர் திராஜூதீன் முன்னிலை வகித்தார். செந்தலைப்பட்டினம் கிளைத் தலைவர் அன்வர் வரவேற்றார்.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு இலவச இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், இசிஜி. பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினர். நோயாளிகளுக்கு சுமார் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 362 நபர்கள் மருத்துவமுகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர். ஏற்பாடுகளை நிஜாமுதீன், கமர்தீன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.