உயிரை குடித்த செல்பி மோகம் மலையில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவுதிண்டுக்கல்:  திண்டுக்கல் மலைக்கோட்டையின் பின்புறம் உள்ளது பொன்மாந்துறை புதுப்பட்டி. நேற்று மாலை 4 மணிக்கு மலைக்கோட்டையில் இருந்து ஒருவர்  தவறி விழுந்ததை கண்டு, போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.   மலைக்கோட்டையில் இருந்து 30 அடிக்கு கீழே ஓத சுவாமி கோயில் அருகே கிடந்த உடலை மீட்டு வந்தனர்.

போலீசார் விசாரணையில், பொன்மாந்துரை புதுப்பட்டி முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பது தெரியவந்தது. கையில் கேமராவுடன் காலை  11 மணிக்கு நுழைவாயிலில் டிக்கெட் வாங்கி மேலே சென்றுள்ளார். மீதம் ரூ.5ஐ வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிச் சென்றிருக்கிறார். செல்பி எடுக்கும் போது,  தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.