முத்துப்பேட்டை அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் சிலிண்டர் வெடித்தது.முத்துப்பேட்டை அருகே மின்கசிவால் வீட்டு சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டு காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் அருகில் பலரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது.

முத்துப் பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக் கொல்லையை சேர்ந்தவர் மனோன்மணி (50). இவரது கணவர் இறந்து விட்டதால் மகன் குமாருடன் வசித்து வருகிறார். இங்கிலாந்தில் குமார் பணி புரிந்து வருவதால் மனோன்மணி மட்டும் தனியாக உள்ளார்.

நேற்று முன் தினம் மனோன்மணி தனது வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்துக்கு சென்றிருந்தார். நேற்று மதியம் இவரது வீட்டுக்கு பின்புறம் கீற்று கொட்டகையில் உள்ள சமையலறையில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மள மளவென தீ பரவியது.

இது குறித்து முத்துப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். அப்போது தான் சமையலறையில் காஸ் சிலிண்டர் இருந்தது பொது மக்களுக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து பொது மக்கள் நீண்ட தூரத்துக்கு சென்று மறைந்து கொண்டனர். அடுத்த சில நிமிடங்களில் சமையலறையில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் அந்த பகுதியில் அதிர்வும் ஏற்பட்டது. அப்போது அருகில் உள்ள பலரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. சிறிது நேரத்தில் சிலிண்டரிலிருந்து காஸ் வெளியேறி அருகில் இருந்த தென்னை மரங்கள் எரிந்தது.

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் சமையல் கொட்டகை மற்றும் அதில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. 3 தென்னை மரங்கள் கருகியது. முத்துப் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் வேதரத்தினம் விசாரணை நடத்தி வருகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.