மும்பையில் பெண் போலீசை நடுரோட்டில் தாக்கிய சிவசேனா பிரமுகர்....மராட்டிய மாநிலம் மும்பை தானேயை சேர்ந்த சிவசேனா பிரமுகர் சசிகாந்த் கால்குடே  கடந்த வியாழக்கிழமை காரில், கிழக்கு விரைவு சாலையில்; போனில் பேசியபடியே சென்றுள்ளார். இதனைக் கவனித்த பெண் போக்குவரத்துக் காவலர்,காரை நிறுத்தும்படி சைகை கட்டியுள்ளார்.

இதனால் கோபமான சசிகாந்த்,காரைவிட்டு இறங்கி அந்த பெண் காவலரை கடுமையாக கைகளால் தாக்கியுள்ளார்.இதில் பெண் போலீஸின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. இந்த தாக்குதலைக் கண்டித்த வழக்குரைஞர் ஒருவருக்கும் அடி உதை விழுந்துள்ளது.இந்தக் காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவிலும் பதிவாகியுள்ளது.

பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சசிகாந்தை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.