’நான் தீவிரவாதி கிடையாது,’ ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்



நான் தீவிரவாதி கிடையாது,’ என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் கூறிஉள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9–ந் தேதி, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியதில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவரான உமர் காலித். ’நான் தீவிரவாதி கிடையாது, வளாகத்தை குறிவைப்பதை பாரதீய ஜனதா அரசு தவிர்ப்பது அவசியமாகிறது,” என்று கூறிஉள்ளார்.

 

 

பல்கலைக்கழக மாணவர் இயக்க தலைவர் கான்யா குமாரை தேசவிரோத வழக்கில் போலீஸ் கைது செய்ததும் கடந்த 12-ம் தேதி தலைமறைவு ஆன உமர் காலித், ‘என்னுடைய பெயர்

உமர் காலித்,    நான் தீவிரவாதி கிடையாது.’ என்று கூறிஉள்ளார். ஊடக விசாரணைகள் தன்னை தீவிரவாதியாக முத்திரை குத்துகிறது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் இயக்க தலைவர் கான்யா குமாரை போலீஸ் கைது செய்ததும் கடந்த 12-ம் தேதி தலைமறைவு ஆன மாணவர்கள் உமர் காலித்,  அனிர்பன் பட்டாச்சார்யா,          ராம நாகா,  அசுதோஷ் குமார்   மற்றும்    ஆனந்த் பிரகாஷ்      ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு திரும்பிஉள்ளனர். இதற்கிடையே அவர்களை கைதுசெய்ய பல்கலைக்கழகத்திற்கு வெளியே போலீஸ் நிற்கிறது. போலீஸ் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள் இன்று கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.