ராகுல்காந்தியை துரோகி என்றும், தூக்கிலிட வேண்டும் என்றும் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. கைலாஷ் சவுத்ரி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை துரோகி என்றும் அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன்பு கூறியதாக தெரிகிறது

.

சவுத்ரி கைலாஷின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தரப்பில் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராகுல்காந்தியை துரோகி என்று கூறியதற்காக எம்.எல்.ஏ உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுத்ரி மீது குற்றச்சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவி தர்ஷன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைலாஷ் சவுத்ரி ராஜஸ்தான் மாநிலம் பாய்டூ தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.