தமிழக சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவுடன் பாஜ கூட்டணி?: டெல்லி தலைவர்கள் முயற்சி பரபரப்பு தகவல்சென்னை: பேரவை ேதர்தலில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைக்க போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லி தலைவர்கள் அதிமுகவுடன் ரகசியமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி உருவாகியுள்ளது. இன்னொரு தேசிய கட்சியனான பாஜ எந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தனித்து விடப்பட்ட நிலையிலே தான் பாஜ இருந்து வருகிறது. எப்படியாவது தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து விடலாம் என்பதில் ஆர்வம் காட்டி வந்தது. ஆனால், தேமுதிக தரப்பில் இருந்து உறுதியான எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர்கள் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியது தான் மிச்சம். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இதனால், தமிழக பாஜ தலைவர்கள் என்ன செய்வது என்று திக்கு திணறி இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள சில தலைவர்களும், தொண்டர்களும் தமிழகத்தில் நல்ல கூட்டணி அமைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் கூறி வருகின்றனர். தமிழக பாஜ தலைவர்களின் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால் டெல்லி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை கையில் எடுத்துள்ளனர். தற்போது டெல்லி பாஜ தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்று வருவதாக பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.1,773 கோடியை மத்திய அரசு நேற்று ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் டெல்லி பாஜ தலைவர்கள் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி ெதாடர்பாக பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக தேர்தலை கவனிப்பதற்காக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேஹர், பியூஸ் கோயல் ஆகியோரை பாஜ தலைமை நியமித்துள்ளது. இந்த அமைச்சர்கள் இரண்டு பேரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் விரைவில் வந்து பேச்சு நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், “அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே ஏற்கனவே உறவு இருந்து வருவதாக நான் கடந்த ஓராண்டாக கூறி வருகிறேன். தமிழ்நாட்டில் பாஜவை யாரும் தீண்ட போவதில்லை. எனவே, அந்த கட்சி அதிமுகவுடன் தான் கூட்டணி சேரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு கட்சி தலைவர்களுமே வகுப்புவாத கொள்கையுடையவர்கள். மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளுவதால் அவர்கள் அப்படி தான் சேருவார்கள்” என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.