பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணியை மிதித்து கொன்ற தாய்லாந்து யானை.தாய்லாந்து கோத்த சாமுயில் பகுதியில் பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஒருவரை யானை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெரத் குரோவ் எனும் அந்த 36 வயது சுற்றுலா பயணி அந்த யானை மீது தனது மகளுடன் அமர்ந்து சவாரி செய்தபோது, அந்த யானை திடீரென அவர்களைத் தூக்கி அடித்துள்ளது.

சம்பவத்தின் போது நிலவிய கடுமையான வெயில் காரணமாக யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மாற்றுதிறனாளியான குரோவ் பொய்க்கால் அணிந்திருந்ததால் அவரால் வேகமாக ஓடி தப்பிக்க இயலவில்லை என கூறப்படுகிறது.

குரோவின் மகளும், வியட்னாமியரான யானைப் பாகனும் காயமடைந்த போதும் உயிர் பிழைத்த நிலையில் குரோவ் மட்டும் துரதிஷ்டவசமாக யானையிடம் மிதிபட்டு இறந்தார்.

தாய்லாந்தில் 4000 உள்ளூர் யானைகள் சுற்றுலா துறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.