முகநூல் சகோதரர்களின் கவனத்திற்கு ! இந்து முன்னணி உருவாக்கிய ஜிஹாதிகள் என்ற ஆவணப்படம்முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி உருவாக்கிய ஜிஹாதிகள் என்ற ஆவணப்படமொன்று வலம் வருகிறது. அதனை யாரும் ஷேர் செய்யாதீர்கள். இதில் பல உண்மைக்குப் புறம்பான விசயங்கள் உள்ளதைக் காணும் யாவரும் புரிந்துகொள்வர். எனவே இதற்கு எதிராக உணர்ச்சி வசப்படுவதை விடுத்து, இதன் பின்னணியிலுள்ள சதியினைப் புரிந்துகொள்வோம்.

குஜராத்தில் மோடி வெற்றிபெற உறுதுணையாக அப்போது அவருடன் இருந்தவர்தான் அமித்ஷா. கல்லூரி மாணவி இர்ஷத் ஜஹான் உட்பட பல்வேறு போலி என்கவுண்டர்கள், குஜராத் கலவரம் போன்றவற்றுக்கு மாஸ்டர் மைண்டாக செயலாற்றியவர்.

முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் இந்துக்களை ஒன்றிணைத்து அவர்களின் ஓட்டுகளைப் பெறுவதுதான் இந்த இருவர் கூட்டணியின் கீழ்த்தர ஃபாஸிச அரசியல். இதனை குஜராத் தொடங்கி முஸஃபர் நகர் வரை நடத்திக் காட்டி வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வாறான கலவரங்கள் நடத்துவதன் முன்னர் கலவரத்தைத் தீண்ட இவர்கள் கையாளும் முறைகளில் லேட்டஸ்டான ஒன்றுதான் பொய்ப் பிரச்சாரமடங்கிய சிடிகளை வெளியிடுதல். முஸஃபர் நகர் கலவரத்துக்கு முன்னர் இதனையே இவர்கள் கையாண்டதை நினைவில் வையுங்கள்.

தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குகிறது. இதுவரை தென்மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளாவில் உருப்படியாக் எதுவும் தேறாத நிலையில், இம்முறை எப்படியாவது கொஞ்சம் இடங்களையாவது கைப்பற்றி விடவேண்டுமென்பது பாஜகவின் கனவு.

இதற்காக அதிமுக, திமுக ஆகியவற்றுடன் கூட்டணிக்கு முயன்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் அது நடக்க வாய்ப்பில்லை. தேமுதிக, பாமக இருவரையும் கூட்டு பிடிக்கலாம் என்றால் அவர்கள் இருவருமே முதல்வர் வேட்பாளர் நாங்கள் தான் என முரண்டு பிடிக்கின்றனர். இந்நிலையில் என்ன செய்வது என யோசித்து தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பவர்களின் அடுத்த ஆலோசனைதான் இந்தப் பொய் ஆவணப்படம். இதன் மூலம் முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் கலவரம் உருவாக்கி இந்து ஓட்டுகளைப் பெறுவதுதான் அவர்கள் லட்சியம். அதற்கு நாம் இடம்தரலாகாது. அறிவுப்பூர்வமாக இதற்கு எதிர்வினையாற்றுவோம்.

இதற்கான பதிலடி என்பது மோடி ஆட்சியின் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துள்ள கலவரங்கள், கொலைகள், ஊழல்கள் முதலானவற்றை கலெக்ட் செய்து அவற்றைக் கொண்டு ஆவணப்படம் உருவாக்கி வெளியிடுவதுதான். இவ்வகையில் அறிவுப்பூர்வமாக எதிர்வினையாற்றுவோம். மக்களின் அமைதியான வாழ்வே முக்கியம். அதற்கு எதிராக செயல்படும் இத்தகைய சமூகவிரோத கும்பல்களை எல்லோரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம். நம் தாய்நாட்டைக் காப்போம்.

 

Thanks To Vkalathur.in
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.