பணிப்பெண்கள், இசை, ஜி.பி.எஸ். டி.வி. உட்பட பல நவீன வசதிகளுடன் விரைவில் அதிவேக ரெயில்விமானங்களில் உள்ளது போல நீங்கள் ரெயில் படிக்கட்டு அருகே சென்றவுடன் ஒரு அழகான இளம் பெண் உங்களை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தது உண்டா?

இந்த கற்பனை விரைவில் நிஜமாக போகிறது. டெல்லி - ஆக்ரா இடையில் கதிமான் எக்ஸ்பிரஸ் என்ற அதிவேக ரெயில் விரையில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 25-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள ரெயில் பட்ஜெட்டில் வெளியிடப்படவுள்ளது.

இந்தியாவின் முதல் செமி-அதிவேக ரெயிலான கதிமான் எக்ஸ்பிரஸில் விமானத்தில் இருக்கும் பெரும்பால வசதிகள் இடம்பெறவுள்ளது. விமானங்களில் உள்ளது போல் பணிப்பெண்கள், பயணிகள் இருக்கும் பெட்டிகளை அறிந்து கொள்ளும் வகையில் ஜி.பி.எஸ். நேரடி டி.வி. நிகழ்ச்சிகள், மெல்லிசை பாடல்கள், இந்திய மற்றும் பிற நாட்டு உணவுகள், ஆட்டோமேட்டிக் தீ அலாரம் ஆகியவை இடம்பெறும் என்று ரெயில்வே துறையை சேர்ந்த உயிர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கதிமான் எக்ஸ்பிரஸ் டெல்லி - ஆக்ரா இடையிலான 200 கிலோ மீட்டர் துரத்தை 105 நிமிடங்களில் சென்று அடையும். இதில் பயணிக்க குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ.690-ம், நவீன வகுப்பில் பயணிக்க ரூ. 1365-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.