கருணாநிதியுடன் காதர்மொய்தீன் சந்திப்பு தி.மு.க.வுடன் முஸ்லிம் லீக் கூட்டணிதி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் இன்று சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பா£க ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருணாநிதியை சந்தித்த பிறகு வெளியே வந்த காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிப்பதாக கருணாநிதி கூறியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் சட்டமன்ற தேர் தலிலும் தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.