ஜெயலலிதா மீது டிராபிக் ராமசாமி அவதூறு வழக்குநமது எம்ஜிஆர் நாளிதழில் தன்னைப் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்டதற்காக அந்நாளிதழின் நிறுவனர் ஜெயலலிதா மீது டிராபிக் ராமசாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.இது தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை ஜார்ஜ்டவுன் 7வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 12.6.15ம் தேதி வெளியான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழில் என்னைப்பற்றி நெரிசல் ராமசாமி என்ற தலைப்பில் கேலி, கிண்டல் செய்து அவதூறாக கேலி சித்திரம் போட்டுள்ளனர்.


வேண்டுமென்றே என்னை களங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த கேலிசித்திரத்தை பிரசுரித்துள்ளனர்.


எனவே, நமது எம்ஜிஆர் நாளிதழின் நிறுவனரான தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அந்த இதழின் வெளியீட்டாளரான எஸ்.எஸ்.பூங்குன்றன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.