கோட்டைவிட்ட முதல்வர்கள்!தமிழகத்தில் முதலமைச்ச ராக இருப்பவர், எங்களை யாராலும் வீழ்த்த முடியாது என்று சவால் விடுவது வாடிக்கைதான். ஆனால், பல முதல்வர்கள் சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பது வரலாறு.

 

1962 தேர்தலில் முதல்வரான எம்.பக்தவத்சலம், அடுத்த தேர்தலிலேயே (1967) பெரும்புதூர் தொகுதியில் டி.ராஜரத்தினத்திடம்(திமுக) தோல்வியடைந்தார்.

 

திமுகவின் முதல் முதல்வரான அண்ணாவும், 1962 தேர்தலில் தன் சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்தில் நடசே முதலியார் என்ற பஸ் முதலாளியிடம் தோற்றார். 5 முறை எம்எல்ஏ, 3 முறை எம்பியாக இருந்த காமராஜர், 1967 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பி.சீனிவாசன் என்ற மாணவத் தலைவரிடம் தோற்றார்.

 

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு (1988) வெறும் 24 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த ஜானகி ராமச்சந்திரன், அடுத்த ஆண்டு (1989) நடந்த தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் தோற்றார். ஜெயலலிதா 1996 தேர்தலில் பர்கூரில் சுகவனத்திடம் (திமுக) தோற்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.