எட்டு நாட்களுக்குள் பாஸ்போர்ட்டுக்கான காவல்துறை விசாரணைபிப். 23- அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே பாஸ்போர்ட்டுகளை அதிக அளவில் வழங்கி வருவதில் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியும், தலைமை பாஸ்போர்ட்டு அதிகாரியுமான முக்தேஷ் கே.பர்தேசி தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் 60 லட்சமாக இருந்த பாஸ்போர்ட்டு வினியோகம் சென்ற ஆண்டுடன் முடிவடைந்த காலத்தில் 1.2 கோடியாக உயர்ந்துள்ளது. 2010-ம் ஆண்டில் பாஸ்போர்ட்டு சேவா திட்டங்கள் வாயிலாக புதிய பாஸ்போர்ட்டு மையங்களை நிறுவி பாஸ்போர்ட்டுகளை விரைவாக வழங்க வகை செய்யப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் 37 பாஸ்போர்ட்டு அலுவலகங்களுடன் 90 சேவா கேந்திரங்கள் உள்ளன. உலகிலேயே பாஸ்போர்ட்டுகளை அதிக அளவில் வழங்கும் 3-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது எந்த ஒரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ பாஸ்போர்ட்டு தொடர்பான வசதிகள் இல்லாமல் இல்லை. அனைத்து இடங்களிலும் அதற்கான வசதிகள் உள்ளன.
பாஸ்போர்ட் வழங்குவதில் கால தாமதம் ஏற்படும் இடம் பாஸ்போர்ட் பெறுபவரை பற்றிய காவல்துறை விசாரணை. கடந்த 2013-ஆம் ஆண்டில் போலீஸ் தனது விசாரணை முடித்து ஆவணங்களை சமர்பிக்க 49 நாட்கள் ஆனது. ஆனால் தற்போது இந்த கால அளவானது 36 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது.
விரைவில் கணினி மூலமான ஆவணப் பரி மாற்றம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே பாஸ் போர்ட்டுக்கான காவல்துறை விசாரணைக்கான கால அளவு 8 நாட்களாக குறைக்கப்படும் என்று தலைமை பாஸ்போர்ட் அதிகாரியான முக்தேஷ் கே.பர்தேசி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு படிக்க செல்வது, வேலைக்கு செல்வது, சுற்றுலா செல்வது உள்ளிட்டவை அதி கரித்து வருவதால் பாஸ்போர்ட்டுகளின் தேவையும் வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.