மது போதையில் விமானத்திலேயே சிறுநீர் கழித்ததற்காக அபராதம்ஏர் இந்தியாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் கடந்த மாதம் 19ஆம் தேதி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் ஜினு ஆபிரகாம் (வயது 39) என்பவர் தனது 10வயது மகனுடன் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஜினு ஆபிரகாம் திடீரென எழுந்து நின்று விமானத்தின் மையப்பகுதியில் சிறுநீர் கழித்தார்.

இந்த சம்பவத்தை கண்டு சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விமான ஊழியர்கள் அவரது கைகளைக் கட்டி இருக்கையில் அமர வைத்தனர். விமானம் பர்மிங்காமில் தரையிறங்கியதும் போலீசார் அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜினு ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்து பர்மிங்காம் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 1,000 பவுண்டு அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.