முத்துப்பேட்டையில் பரபரப்பு போலீஸ்காரரிடம் தகராறு செய்த வாலிபர் கைதுதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள களப்பாலை சேர்ந்தவர் சண்முகநாதன். தலைமை ஏட்டு. இவரும், ஆயுதப்படை போலீஸ்காரரான லெனினும் நேற்று முத்துப்பேட்டை பழைய பஸ்நிலையம் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுரோட்டில் நின்று கொண்டு ஒரு வாலிபர் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட சண்முகநாதன் அவரை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆலங்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்று தெரியவந்தது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.