அதிமுக கூட்டணியில் இருந்து முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால் ஜெ.க்கு பாஜக ஆதரவு.. சொல்வது சு.சுவாமிசென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால் அக்கட்சிக்கு பாரதிய ஜனதா ஆதரவு தரும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது

சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால்...

 

இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: சட்டசபை தேர்தலில் முஸ்லிம் கட்சிகளை கூட்டணியில் இருந்து

ஜெயலலிதா வெளியேற்றினால் அவரை நாங்கள் ஆதரிப்போம்.

 

 

சட்டசபை தேர்தலில் திமுக- தேமுதிக- பாஜக இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை கொளுத்திப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டது. வழக்கம் போல தேமுதிக இறுதி முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் திமுக- தேமுதிக- காங்கிரஸ் என ஒரு மெகா கூட்டணி அமைந்தால் அதற்கு போட்டியாக வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.