துபாய் ஏர்போர்டில் நகை, பணங்களை விட்டு சென்றவரை தேடிப் பிடித்து ஒப்படைத்த மனித நேய முத்துப்பேட்டை வாலிபர்.பிப்ரவரி 22: துபாய் ஏர்போர்டில் நகை, பணங்களை விட்டு சென்றவரை தேடிப் பிடித்து ஒப்படைத்த மனித நேய முத்துப்பேட்டை வாலிபர்.

 

துபாய் ஏர்போர்டில் ஹைதராபாத் தொழிலாளி விட்டுசென்ற நகை, பணங்களை தேடிப் பிடித்து ஒப்படைத்த முத்துப்பேட்டை வாலிபர் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியைச் சேர்ந்த பகுருதீன் மகன் யாசர் அரபாத்(27). இவர் துபாய் நாட்டில் பணி பரிந்து வருகிறார். விடுமுறையில் ஊர் திரும்புவதற்காக கடந்த 3-ம் தேதி துபாய் ஏர்போர்டிலிருந்து புறப்பட்ட அவர் 4-ம் தேதி அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார். அப்பொழுது தனது பேக்கை பரிசோதித்த போது மனிபர்சு ஒன்று இருந்தது. இதில் 2 பவுன் தங்க பிஸ்கட், 20 ஆயிரம் மதிப்புள்ள துபாய் நாட்டின் பணங்கள் மற்றும் சம்மந்தப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் கார்டு, அவர் பணி புரிவதற்கான அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்தது.

 

இதனைக் கண்ட யாசர் அரபாத் அதிர்ச்சி அடைந்து உரியவரிடம் சேர்க்க முயற்சித்து வீடு திரும்பினார். பின்னர் விட்டுசென்ற தொழிலாளி பணிப்புரியும் துபாயில் உள்ள கம்பெனிக்கு அவரது நண்பர் நவாஸ்கானை அனுப்பி வைத்து அவர் மூலம் தொடர்புக்கொண்டு விட்டு சென்றவரின் செல்நம்பர் பெற்றார். பின்னர் பொருளை விட்டு சென்றவர் ஹைதராபாத், நிஜாம்பாத் மாவட்டம், ஆர்மூர் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயராம் மகன் சதாநாந்த்(50) என்று தெரியவந்தது. பின்னர் அவரை தொடர்பு கொண்டு யாசர் அரபாத் தன்னிடம் அந்த பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார். மகிழ்ச்சி அடைந்த சதாநாந்த் அவரின் உறவினர் ராகேசுடன் நேற்று தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வழியாக முத்துப்பேட்டைக்கு வந்து பின்னர் யாசர் அரபாத் வீட்டிற்கு வந்தார். அவரிடம் யாசர் அரபாத் தான் கண்டெடுத்த பொருட்களை சதாநாந்திடம் வழங்கினார். அப்பொழுது அவரின் தந்தை பகுருதீன,; நண்பர்கள் ஆதம் மாலிக், புரோஸ்கான், வர்த்தகக்கழக பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

பொருட்களைப் மகிழ்ச்சியுடன் பெற்ற சதாநாந்த் கூறுகையில்: நான் 18 வருடங்களாக துபாயில் ஒரு கம்பெனியில் கார் கழுவும் கூலித்தொழில் செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நான் மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது பொருட்கள் காணாமல் போனதும் கவலை அடைந்தேன். இன்றைக்கு எனது உழைப்பு வீண்போகாமல் மனித நேயத்துடன் கடவுள் போன்று இந்த சகோதரர் எனக்கு மீட்டுத்தந்துள்ளார். அவரை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்றார். இந்த நிலையில் பொருட்களை விட்டு சென்றவரை மனித நேயத்துடன் மிகவும் சிரமம்பட்டு கண்டுபிடித்து அவரிடம் சேர்த்த வாலிபர் யாசர் அரபாத்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

 

12741901_447184028806085_3586965721458550880_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.