இந்திய தண்டனை சட்டத்தை மாற்றி அமைக்கவேண்டியது அவசியம்: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிஇந்திய தண்டனை சட்டத்தை மாற்றி அமைக்கவேண்டியது அவசியம் என குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தண்டனைச் சட்டம் பிற சட்டங்களுக்கு முன்மாதிரியானது என்பதில் எந்த சந்தேகம் இல்லை என்றார் இருப்பினும் 21ம் நூற்றாண்டிற்கு தேவையான வகையில் அச்சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என பிரணாப் வலியுறுத்தினார். இந்திய தண்டனை சட்டம், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களின் காலனி ஆதிக்கத் தேவைகளை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டவை என்று கூறினார்.

நவீன ஜனநாயகத்துக்கு தகுந்த வகையில் காவல் துறை போன்ற அமைப்புகளை மாற்றி அமைப்பது சட்டம் ஏற்றுபவர்களின் கடமை என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். டெல்லி ஜே.என்.யு மாணவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124படி தேச துரோக வழக்கு தொடரப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த சட்டபிரிவையே நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவரின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.