நாகூர் தர்கா சொத்துக்களை விற்க ஐகோர்ட் தடை.நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் செய்யது முகமது கலிபா சாகிப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:-

நாகூர் தர்காவுக்கு சொந்தமாக பல கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள், நாகப்பட்டினம் மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் உள்ளது. தர்காவையும், சொத்துக்களையும் நிர்வகிக்க நிர்வாக அறக்கட்டளையும், ஆலோசனை வாரியமும் உள்ளன. இந்த ஆலோசனை வாரியத்துக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். நான் இந்த தேர்தலில் போட்டியிட்டு, நாகூர் தர்கா ஆலோசனை வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

தர்காவுக்கு சொந்தமான சொத்துக்கள் பல தனியார் வசம் உள்ளன. உதாரணத்துக்கு எட்டிவாய்க்கால் என்ற கிராமத்தில் தர்காவுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளது என்று ஆவணங்கள் உள்ளன. நான் அந்த சொத்தை தேடி சென்றபோது, எட்டிவாய்க்கால் என்ற கிராமத்தையே காணவில்லை.

எனவே, சொத்துக்களை தனி நபர் பெயருக்கு மாற்றம் செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும். தர்காவுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து விசாரிக்கவும், காணாமல் போன சொத்துக்களை கண்டு பிடிக்கவும் நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர், நாகூர் தர்காவின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும், ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தர்காவுக்கு சொந்தமான சொத்துக்களை 3-வது நபர் பெயருக்கு மாற்ற இடைக்கால தடை விதிக்கிறேன். விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.