முத்துப் பேட்டை புதுபள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஓட்டலை காலி செய்யக்கோரி ஜமாத் பிரமுகர்கள் போராட்டம். 

முத்துப்பேட்டையில் புதுபள்ளி வாசலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஓட்டலை காலி செய்ய வலியுறுத்தி ஜமாத் பிரமுகர்கள் போராட்டம் நடத்தினர்.

முத்துப் பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே புதுபள்ளிவாசல் உள்ளது. இதன் அருகே பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் 27 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த திரியெம் அஜீஸ் என்பவர் திரியெம் ஹோட்டல் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தார். 15 ஆண்டுகளுக்கு முன் ஓட்டலை தனது உறவினரான பாக்கம் கோட்டூரை சேர்ந்த ஹாஜா மைதீனிடம் ஒப்படைத்தார்.

இந் நிலையில் புதுப் பள்ளிவாசல் நிர்வாகம், ஓட்டல் இருக்கும் இடம் மற்றும் அதன் அருகில் உள்ள காலி இடத்தில் பெண்கள் மதரசா கட்ட முடிவு செய்தது. அதன்படி உரிமையாளர் ஹாஜா மைதீனிடம், ஓட்டலை காலி செய்யுமாறு 3 மாதங்களுக்கு முன் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கு ஓட்டல் உரிமையாளர் 3 மாதம் கால அவகாசம் கேட்டார்.

இதனால் கடந்த 31ம் தேதி ஓட்டலை காலி செய்து கொள்வதாக ஒப்பு கொண்டுள்ளார். இந் நிலையில் ஹாஜா மைதீன் கடந்த சில நாட்களுக்கு முன் ஓட்டலை காலி செய்ய மறுத்து வக்கீல் நோட்டீசை பள்ளி வாசல் நிர்வாகத்துக்கு அனுப்பினார்.

இந் நிலையில் நேற்று முன்தினம் கடந்த 31ம் தேதி ஓட்டலை காலி செய்யாமல் நேற்றும் ஹாஜா மைதீன் வழக்கம் போல் வியாபாரம் நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் அவர்களுக்கு ஆதரவாக தமுமுக நகர தலைவர் சம்சுதீன், மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, எஸ் டி பிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், திமுக மாவட்ட பிரதிநிதி இபுராஹிம், வார்டு செயலாளர் நவாஸ்கான், அதிமுக நிர்வாகி சுல்தான் இபுராஹிம் தலைமையில் நூற்றுக்கும் மேற் பட்டோர் சர்ச்சைக்குரிய அந்த ஓட்டலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உடனடியாக ஓட்டலை காலி செய்யா விட்டால் நாங்களே அகற்றுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஓட்டல் உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் ஹாஜா மைதீன், ஓட்டலை உடனடியாக காலி செய்வதாக உறுதியளித்தார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

புகைப்படம். சுனா இனா சுல்தான் இப்ராஹீம் & மு.முகைதீன் பிச்சை.

 

[gallery columns="2" ids="30885,30884,30888,30889,30894,30897,30896,30895,30901,30902,30903,30904,30900,30886,30890"]

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.