எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் உடல் இன்று மீண்டும் பிரேத பரிசோதனைமதுராந்தகம், பிப். 13–

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரி அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை எர்ணாவூரை சேர்ந்த மாணவி மோனிஷாவின் உடல் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஏற்கனவே மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் செய்யூரை சேர்ந்த மாணவி சரண்யாவின் உடலையும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவியின் தந்தை ஏழுமலை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி மாலா அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து ஏழுமலை மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் அக்னி கோத்ரி, வேணுகோபால் ஆகியோர் சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.

சரண்யாவின் உடல் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னரே செய்யூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய சென்னை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து இன்று காலை டாக்டர்கள் குழுவினர் புறப்பட்டு சென்றனர். போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் இருந்து தடயவியல் துறை தலைவர் டாக்டர் சம்பத்குமார் செய்யூருக்கு சென்றார்.

செய்யூர் தாசில்தார் செல்வராஜ், செய்யூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆகியோரது முன்னிலையில் மாணவி சரண்யாவின் உடல் 10.30 மணி அளவில் தோண்டி எடுக்கப்பட்டது. இடுகாட்டில் வைத்தே டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது சரண்யாவின் தந்தை ஏழுமலை, தாய் சிந்தனை செல்வி ஆகியோர் சோகத்துடன் கண்ணீர் மல்க காத்திருந்தனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா திடீரென செய்யூர் இடுகாட்டுக்கு காரில் வந்து இறங்கினார். பின்னர் அவர் சரண்யாவின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.