இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பேஸ் மேக்கரை கண்டுபிடித்தவர் மரணம்நியூயார்க்

19566 ECH20601047_1
இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பேஸ் மேக்கர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த ஆல்பிரட் இ மான் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார்.

சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகனாக அமெரிக்காவில் பிறந்த மான், வரிசையாக பல தொழில்களை தொடங்கினார். அவர் தொட்டதெல்லாம் வெற்றிகரமாக துலங்கிதையடுத்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிலில் இறங்கினார்.

இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பேஸ் மேக்கர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்து போன்றவற்றை இவரது மான்கைன்ட் நிறுவனம் கண்டுபிடித்தது. பின்னர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான சோலார் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை தயாரித்த இவர் பெரும் கொடையாளராகவும் விளங்கினார்.

வெலேனிக்கா என்ற நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்துவந்த ஆல்பிரட் இ மான் தனது 90-வது வயதில் கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.