இஸ்லாமியர்கள் ஒன்றும் நாட்டிற்கு எதிரானவர்கள் கிடையாது, இஸ்லாமியர்களை சந்தேகத்துடன் பார்த்தால், இந்தியா காஷ்மீரை வைத்திருக்க முடியாது பரூக் அப்துல்லாஇஸ்லாமியர்களை சந்தேகத்துடன் பார்த்தால், இந்தியா காஷ்மீரை வைத்திருக்க முடியாது என்று முன்னாள் மத்திய மந்திரி பரூக் அப்துல்லா கூறிஉள்ளார்.


காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதி, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ (ஆசாத் காஷ்மீர்) என அழைக்கப்பட்டு வருகிறது.


இந்த பகுதி பாகிஸ்தானுடனே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூறி, காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா சர்ச்சையை கிளப்பி உள்ளார். ‘பாகிஸ்தானிடம் இருந்து ஆசாத் காஷ்மீரை பறிக்கும் சக்தி, பூமியில் யாருக்கும் கிடையாது. ஆசாத் காஷ்மீர், கில்கிட் பல்திஸ்தான் மற்றும் அஸ்கர்டூ போன்ற பகுதிகள் தொடர்ந்து பாகிஸ்தானுடனே இருக்க வேண்டும். இதைப்போல ஜம்முவும், காஷ்மீரும் இந்தியாவுக்கே சொந்தம்’ என்று கூறிஉள்ளார்.


இரு நாடுகளின் நட்புறவை சிலர் விரும்பவில்லை என்று கூறிய அப்துல்லா, சிறந்த நட்புறவுக்கு இரு நாடுகளும் ஒருமுறை ஒத்துக்கொண்டால் இந்த சக்திகள் அனைத்தும் தானாகவே மறைந்து விடும் எனவும், அவ்வாறு இரு நாடுகளும் தங்கள் பிரச்சினைகளை தீர்த்து கரங்களை ஒன்றிணைக்கும்வரை பதன்கோட், மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும் எனவும் கூறி உள்ளார்.


இந்தியா காஷ்மீரை வைத்திருக்க முடியாது


இஸ்லாமியர்களை சந்தேகத்துடன் பார்த்தால், இந்தியா காஷ்மீரை வைத்திருக்க முடியாது என்று முன்னாள் மத்திய மந்திரி பரூக் அப்துல்லா கூறிஉள்ளார்.


தேசிய மாநாட்டுக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஷேக் நசீர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய பரூக் அப்துல்லா, ”இந்தியாவில் உருவாகிவரும் புயலானது எச்சரிக்கைய மணியை ஒலிக்கசெய்து உள்ளது, இதனை நாம் புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையிலான சண்டையானது தொடர்ந்தாலும் மத்திய அரசு காஷ்மீரை வைத்திருக்க முடியாது என்பதை நான் சொல்கிறேன். நீங்கள் இதனை விரும்பவில்லை என்றாலும் இதுதான் உண்மையாகும்.”  என்றார்.


இஸ்லாமியர்கள் ஒன்றும் நாட்டிற்கு எதிரானவர்கள் கிடையாது, ஆனால் அவர்கள் இன்னும் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறார்கள்.


“இன்று, இஸ்லாமியர்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்கள் இந்தியர்கள் கிடையாதா? இஸ்லாமியர்களும் எதையும் தியாகம் செய்யவில்லையா? நீங்கள் பிரிகேடியர் உஸ்மானை (1947 இந்தியா- பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ அதிகாரி)  மறந்துவிட்டீர்கள்? நாட்டை பாதுகாப்பதற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்தவர். இஸ்லாமியர்களாக இருந்து நாட்டிற்காக போரிட்டவர்களையும், போரிடுபவர்களையும் மறந்துவிட்டீர்களா? இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் கிடையாது.


இஸ்லாமியர்களை எதிரிகள் என்று முத்திரையிடும் இயக்கங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கடவுளை கொண்டு பிரிக்க வேண்டாம். உங்களுடைய கடவுளுக்கும், எங்களுடைய கடவுளுக்கும் எந்தஒரு வேறுபாடும் கிடையாது. வேறுபாடு எதுவும் இருந்து இருந்தால் என்னுடைய இரத்தத்தின் நிறமானது சிவப்பாக இருக்காது, பச்சையாக இருந்திருக்கும் உங்களுடையது காவியாக இருந்து இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு மற்றொரு கலராக இருந்து இருக்கும்... கடவுள் நம் அனைவரையும் ஒரே மாதிரியே படைத்து உள்ளார். வேறுபாட்டை சீர்படுத்தவும், இதயங்களை இணைக்கவும் முயற்சியுங்கள், என்று பரூக் அப்துல்லா பேசிஉள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.