ஒரத்தநாட்டில் எச்.ராஜாவிற்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்ஒரத்தநாடு சட்டமன்ற ஊழியர் சங்க கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நல கூட்டணி கட்சியினர் கருப்புகொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

 

ஒரத்தநாடு ரத்னா மகாலில் பா.ஜனதா கட்சியின் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் ஊழியர்கள் சங்க கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார்.

 

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாணவர்களை சுட்டுதள்ள வேண்டும் என எச்.ராஜா பேட்டியளித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரத்தநாட்டிற்கு எச்.ராஜா வரக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் மக்கள் நல கூட்டணி கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு கொடிஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட போலீசார் ஒரத்தநாட்டிற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தினர்.

 

இதையடுத்து போலீசார் பாதுகாப்பு அளித்ததை தொடர்ந்து எச்.ராஜா கூட்டத்தில் கலந்து கொண்டார். மக்கள் நல கூட்டணி கட்சியினரின் இந்த திடீர் போராட்டத்தால் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.