முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளிக்கூடத்திற்கு சென்ற தமுமுக ஹாஜா கனிபெண்கல்விக்கு பெருந்தொண்டு செய்து வரும் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளிக்கூடத்திற்கு சென்ற வாரம் சென்றோம்.
திருவாரூர் மாவட் மற்றும் மமக நிர்வாகிகள் ஹக், ஷாகுல், தீன்முஹம்மது மற்றும் அதிரை செய்யது காக்கா உள்ளிட்டோர் உடன் வந்தனர் .
பள்ளியின் நிறுவனரும் நம் மீது பாசம் பொழிபவருமான சமூகத்தொண்டர் முஸ்தபா அவர்கள் பள்ளி முழுவதையும் சுற்றிக்காட்டினார்.

சிங்கப்பூரின் நவீன வசதிகளை தனது சொந்த ஊரில் தன் தாயார் பெயரில் அவர் உருவாக்கிய பள்ளியில் சாத்தியப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது..

சுற்றுச்சூழல் ஆர்வலரான அவர் மழைநீர் சேமிப்புக்கும் நீர் மேலாண்மைக்கும் பள்ளிவளாகத்தில் ஏற்படுத்தியுள்ள கட்டமைப்பும்,
மூலிகைகள் உள்ளிட்ட அரிய தாவரங்கள் வளரும் தோட்டமும் மனங்கவர்ந்தன.

குளிரூட்டப்பட்ட அறையைத் தவிர்த்து தோட்டத்தில் அமர்ந்து தேநீர் பருகியபடி பேசியது இனிமை...

பலதுறையிலும் உள்ள பண்பட்ட நல்லுள்ளங்களுக்கிடையே ஒரு பாலமாய்த் திகழ்பவர் திரு.முஸ்தபா அவர்கள். பெண்கல்விக்காக அவர் எடுத்த பெருமுயற்சி பாராட்டுக்குரியது.

அந்தப் பள்ளிக்கூடத்திற்கு மாணவிகள் வரும் பாலத்தை ஆக்ரமிப்பு அகற்றல் என்ற பெயரில் இடிக்க நடக்கும் முயற்சியை அறிந்து அங்கு சென்றோம்.

"உங்கள் முதல் வருகையே ஒரு சோகமான தருணத்தில் அமைந்து விட்டதே " என்று புன்னகை மாறாமல் சொன்னார்...
அன்புள்ளங்கள் வருவதற்கு சரியான தருணம் அது தானே என்றோம்...

ரஹ்மத் என்றால் அருட்கொடை...

மகளிர்க்கு கல்வி என்பது மாபெரும் அருட்கொடை...
அதற்கு எவ்வித இடையூறும் இன்றி காப்பதும் சமூக ஊழியர்களின் கடமை...

[gallery columns="1" size="large" ids="31932,31931,31933,31934,31935"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.