ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்: பொதுமக்களுக்கு எப்.டி.ஏ. அறிவுறுத்தல்.ஆன்லைனில் சட்டவிரோதமாக மருந்து பொருட்கள் விற்பனை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி பல மருந்து நிறுவனங்கள் தரமற்ற மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடிய மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால் பொது மக்கள் அதிகளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் விதிமுறைப்படி டாக்டர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ஆன்லைனில் மருந்து பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்து உணவு மற்றும் மருந்து கழக (எப்.டி.ஏ.) அதிகாரி பி.ஆர். மாசல் கூறியதாவது:-

ஆன்லைனில் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை எங்களால் ஆய்வு செய்ய முடியாது. எனவே பொது மக்கள் ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.