கன்னையாகுமார் கைது பின்னணியில் மாபெரும் மோசடி! ஜீ (zee) டி.வி. தலைமை ஆசிரியர் ராஜினாமா செய்துள்ளார். ஊடகங்களில் வெளிவராத தகவல்ஜெ.என்.யு. மாணவர் கன்னையாகுமார் கைது மீதான வழக்கு - _ கைது _ சிறை என்பவற்றில் மிகப் பெரிய மோசடி நடந்திருக்கிறது. வீடியோ வில் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜீ (zee) டி.வி. தலைமை ஆசிரியர் ராஜினாமா செய்துள்ளார்.

ஜீ (zee)ஆங்கில இந்திச் செய்தியின் செய்தி வெளியீட்டுப் பிரிவு தயாரிப்பாளரும், அரசியல் செய்திப்பிரிவு தலைமை எடிட்டருமான விஸ்வ தீபக் நேரடியாக பதிவு செய்த காணொலியை ஜீ டீவி நிறுவனம் போலியாக தயாரித்து வெளியிட்டதை கண்டித்து தனது பதவியை உதறித்தள்ளினார்.

ஜே.என்.யு.வில்
நடந்தது என்ன?

பிப்ரவரி 9 ஆம் தேதி மாலை அய்ந்து மணிக்கு அப்சல் குருவின் தூக்கு மற்றும் இந்தியாவில் தூக்கிற்கு எதிரான கருத்தரங்கம் போன்றவை நடைபெறுவதாக இருந்தது, இதற்கு பல்கலைக்கழக நிர்வாகமும் அனுமதி யளித்திருந்தது. ஆனால் திடீரென்று

ஏபிவிபி மாணவர் அமைப்பின் அழுத்தம் காரணமாக அந்தக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது, கூட்டம் நடந்துகொண்டு இருக்கும் போது அனுமதி இல்லை என்ற விளக்கத்தை கொடுத்தது. இந்தக் கூட்டம் நடத்திய 9 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டது, இந்த நிலையில் ஏபிவிபி மாணவர்கள் அமைப்பு தொலைக்காட்சியில் வெளிவந்த சில காணொலியைக் (வீடியோ) காண்பித்து அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வற்புறுத்தியது, இதனை அடுத்து டில்லி காவல்துறை காணொலி குறித்து எந்த ஒரு தீவிர விசாரணையும் இன்றி மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையாவை கைது செய்து சிறையில் அடைத்தது.

அமைச்சர்களின் பொறுப்பற்ற கருத்து

மேலும் பாஜகவின் தலைவரான அமித் ஷா கன்னையா குமாரை தேசத்துரோகி என்று கூறினார். உள்துறை அமைச்சர் ஒரு படி மேலே சென்று மாணவர் அமைப்புகள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதியைப் பெறுகின்றனர் என்று கூறினார். ஸ்மிருதி இரானியும் தன் பங்கிற்கு தேசத்துரோகம் செய்யும் மாணவர்களை படிக்கவைக்க பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அம்மாணவர்களின் பெற்றோர்கள் மீது வளர்ப்பு தொடர்பாக பழியைச் சுமத்தினார்.

காணொலியைப் பதிவு செய்த விஷ்வ தீபக் இன்று தனது தலைமை எடிட்டர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு அவர் டில்லி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் மோசடித் திரையைக் கிழித்தார்.

அதிர்ச்சி! அதிர்ச்சி!! மனசாட்சி என்னை உறுத்தியது

என்னை மாணவர் அமைப்பின் செயலாளர் ஒருவர் தனது நிகழ்ச்சியைப் படம் பிடிக்க அழைத்தார். அவரது அழைப்பின் பேரில் நான் தான் டில்லி பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்கள் கருத்தரங்கத்தைப் பதிவு செய் தேன். எனது மொபைல் காமிராவிலும் எனது நன்பர் ஒருவரை படம் பிடிக்க கொடுத்து பதிவு செய்தேன்.

அந்த நிகழ்ச்சியை நான் பணிபுரியும் ஜீ செய்தி நிறுவனத்திடம் கொடுத்து அதற்கான செய்தியை எழுதி தொகுக்க அனுமதி கேட்டிருந்தேன். இந்த நிலையில் 11 ஆம் தேதி அன்று மாலை நான் தொகுத்த காணோலி ஜீ ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சியில் வெளியானது. அதைப் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன், அதில் பாகிஸ்தான் ஸிந்தாபாத, பாரத் முர்தாபாத், இந்துஸ்தான் கோ துக்டே கரேங்கே(பாகிஸ்தான் வாழ்க, இந்தியா ஒழிக, இந்தியாவை உடைப்போம்) என்ற வார்த்தைகள் மாணவர்கள் முழங்குவதாக பின்புலத்தில் ஒலித்தது, இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன், இது எங்கு சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எடிட்டோரியலில் விஷமத்தனம் செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

மேலும் அந்த காணொலியின் தலைப்பே பாகிஸ் தான் ஸிந்தாபாத அட் ஜே என் யு(பாகிஸ்தான் வாழ்க இது ஜே என் யு வின் முழக்கம் என்று கூறினார்) என்று இருந்தது.

மேலும் அவர் கூறியதாவது: ஜே.என்.யு வில் நான் செய்தி சேகரிக்கும் போது எனது நிலைய நிருபர் பவன் நெஹராவும் உடனிருந்தார்.அவரிடமும் நான் இந்த நிகழ்ச்சியை விரிவான செய்தியாக எழுதி ஞாயிறு அன்று சிறப்பு நிகழ்ச்சிக்காக கொடுக்க உள்ளேன் என்று கூறியிருந்தார்.

விஷ்வ தீபக் செய்தித்தொடர்புத்துறை கல்வி நிறுவனமான (மிமிவிசி) அய் அய் எம் சி டில்லியில் பட்டம் வாங்கியவர் , முதலில் மராட்டி நாளிதழான ஜன்சத்தா மற்றும் இந்தி ஆன்மீக நாளிதழ் சன்ஸ்கார் போன்ற இதழ்களில் பணியாற்றியவர். அதன் பிறகு நியூஸ் 24, ஆஜ் தக், நியூஸ் நேசன் மற்றும் பகுதி நேர செய்தியாளராக பிபிசி, இந்தி தூர்தர்ஷன் செய்தி பிரிவில் பணியாற்றியவர்.
டில்லியில் உள்ள பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு விஷ்வ தீபக் தான் மொபைலில் பதிவு செய்த காணொலியை கொடுத்துள்ளார். அது தான் சமீபத்தில் வெளியானது. இதில் கன்னையா பார்ப்பனீயத்தில் இருந்து விடுதலை, மனுதர்ம ஆட்சியில் இருந்துவிடுதலை, காவிக்குண்டர்களின் கைக்கூலிகளிடமிருந்து விடுதலை, கார்ப்பரேட்டுக்ளின் அடிமைகளிடமிருந்து விடுதலை போன்ற முழக்கங்களை எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (இதை விடுதலை ஞாயிறு மலரில் படங்களுடன் வெளியிட் டிருந்தது.)

---------------------

கோஷங்களின் குரல் யாருடையது? மிகப் பெரிய தில்லுமுல்லு!

பிப்ரவரி 10 ஆம் தேதி எனக்கு ஓய்வு நாள் ஆகும், ஆகவே அந்த நாள் வேறு ஒரு தலைமை எடிட்டர் எனது காணொலியைக் பார்த்திருக்கிறார். இந்த காணொலியை மூன்று பகுதிகளாக பிரித்து தனியாக கோஷங்களை யாரையோ எழுப்பவைத்து உண்மையான காணொலியுடன் இணைத்துள்ளனர். இவ்வளவு முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் யார் இந்த விஷமத்தனத்தைச் செய்தது என்று எனக்குத் தெரியவில்லை. போலியான காணொலியில் இணைக்கப்பட்ட வாசகங்கள் மாணவர்கள் அமைப்பினர் பேசவில்லை. அந்த வாசகங்களை அனைத்தும் வேறு இடத்தில் மிகச்சிலரைப் பேசவைத்து பதிவு செய்யப்பட்டது, இந்த காணொலியைப் பார்க்கும் வல்லுநர்களுக்கு மிகவும் எளிதாகப் புரியும்; அதே நேரத்தில் இந்தக் காணொலியை மிகக் கவனமாகக் கேட்டால் சின்ன குழந்தைக்குக் கூட போலியாக சேர்க்கப்பட்ட வாசகங்கள் என தெரிந்துவிடும் என்று கூறினார்.

 

நன்றி     விடுதலை நாளிதழ்s7
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.