வைத்தீஸ்வரன் கோவிலில் மதுகுடித்துவிட்டு பள்ளி சீருடையில் சாலையில் கிடந்த பிளஸ்-1 மாணவர்கள்நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவர்கள் மதுகுடித்துவிட்டு பள்ளி சீருடையில் வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு மாட வீதியில் சாலையில் மயங்கி கிடந்தனர்.இதனை பார்த்த அப் பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாணவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள கடையில் அமர வைத்தனர்.

இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விசாரணையில் 2 மாணவர்களும் புங்கனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.இதனை தொடர்ந்து மாணவர்களை ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றனர்.

மாணவர்கள் மது போதையில் சாலையில் கிடந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அதனை பலருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வருகிறார்கள்.இந்த சம்பவம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.