கேரளாவில் தேர்வு எழுதுவதற்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி



கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், தேர்வு எழுதுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் இருந்து தண்ணீரில் குதித்து அவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றினர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அபாய கட்டத்தை மாணவிகள் தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.