பேஸ்புக் பிழையை கண்டறிந்த இந்தியருக்கு 10 லட்சம் பரிசளித்தது பேஸ்புக் நிறுவனம்ஹேக்கர்கள் மூலமாக பேஸ்புக் கணக்குகள் தாக்கப்படும் அபாயத்தை உணர்த்திய பெங்களூரைச் சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞருக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத்தொகை அளித்துள்ளது.

பொதுவாக பேஸ்புக் கணக்கின் பாஸ்வோர்டை மறந்துவிட்டால் அதனை மீட்டெடுக்கும் வகையிலாக 6 இலக்க ரகசிய எண் ஒன்று நமது ஈ-மெயில் முகவரிக்கோ, மொபைல் எண்ணிற்கோ அனுப்பப்படும் அதனை உபயோகித்து புதிய பாஸ்வோர்டை நாம் உருவாக்கிக்கொண்டு மீண்டும் பேஸ்புக் கணக்கை உபயோகப்படுத்தலாம்.

அவ்வாறு அனுப்பப்படும் 6 இலக்க ரகசிய எண்ணை இலகுவாக பேஸ்புக்கின் பீட்டா வெர்சன் வழியாக ஹேக் செய்யப்படும் வழி உள்ளதை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ், அதனை பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினார்.

இந்த ஆபத்தை ஒத்துக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், ஆனந்த்திற்கு $15,000 ( இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம்) பரிசு தொகை வழங்கியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.