முத்துப்பேட்டையில் 12-ம் வகுப்பு தேர்வு எழுத விதிமுறையை மீறி பைக்கில் ஊர்வலமாக செல்வதால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு.சமீபத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி உள்ளது. அதனால் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ரஹ்மத் பெண்கள் பள்ளி ஆகிய 3 இடங்களில் அப்பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த நிலையில் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பிரிலியண்ட் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த பள்ளியிலிருந்து காலை 8:30 மணிக்கு தேர்வு எழுதப் புறப்படும் மாணவர்கள் கும்பலாக பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மன்னார்குடி சாலையில் ஊர்வலமாக சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக விதிமுறையை மீறி தினமும் அரசு ஆண்கள் பள்ளிக்கு செல்கின்றனர். அதே போல் தேர்வு எழுதி முடிந்ததும் தனியார் பள்ளிக்கு அதே பானியில் சென்று திரும்பி வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கும் போக்கு வரத்திற்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பல மாணவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்று வருவதால் மாணவர்கள் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் மாணவர் தேர்வு எழுத பைக்கிள் சென்று வருவதை தனியார் பள்ளி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் செய்தி:
முத்துப்பேட்டை தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத பைக்கில் விதிமுறையை மீறி அணிவகுத்து சாலையைக் கடக்கும் காட்சி

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை12794662_473274639536836_7422714848251425728_o
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.