மாணவி கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ. கோர்ட்டில் சரண் 14 நாள் காவலில் வைக்க உத்தரவுபீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் கடந்த மாதம் 6–ந்தேதி 15 வயது பள்ளி மாணவியை கற்பழித்ததாக ராஷ்டீரிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ. ராஜ் வல்லப யாதவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். ஆனால் எம்.எல்.ஏ. யாதவ் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

தலைமறைவான எம்.எல்.ஏ. யாதவை கைது செய்யக்கோரி பீகார் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி சபையை முடக்கின.

இதற்கிடையே எம்.எல்.ஏயின் ரூ.10 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை போலீசார் கைப்பற்றி, அதனை ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த எம்.எல்.ஏ. ராஜ் வல்லப யாதவ் நேற்று பீகார் ஷெரீப் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.