ரூ.1,500 கோடி என்ற கேள்விக்கு பேட்டியை கேன்சல் செய்த வைகோ - வீடியோ இனைப்புகூட்டணியில் சேர தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ரூ.500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என வைகோ கூறியிருந்தார். இது தொடர்பாக வைகோவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து முதலில் கருத்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, வைகோவிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்

இந்த நிலையில் தனியார் செய்திதொலைக்காட்சி ஒன்றுக்கு வைகோ பேட்டி அளித்து கொண்டு இருந்தார். அப்போது செய்தியாளர்

தி.மு.க தரப்பில் ரூ.500 கோடி கொடுக்க முன்வந்தார்கள்...80 இடங்கள் கொடுக்க முன்வந்தார்கள் என்கிறது உங்களது குற்றச்சாட்டு. அதுமட்டுமல்ல அதிமுகவின் பி டீமாக செயல்படுகிற வைகோ அவர்கள் தலைமையில் இயங்குகிற அந்த அமைப்புக்கு ரூ1,500 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் மதிமுக பொதுச்செயலர் வைகோ பேட்டியை பாதியில் முடித்து காலர் மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி சென்றார்.

கோபப்பட்ட அரசியல் பண்ண முடியுமா ??

Posted by on Saturday, March 26, 2016
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.