மூன்று ஆண்டுகளில் மத்திய மந்திரிகளின் வெளிநாட்டு பயண செலவு ரூ.1537 கோடி! வாவ்....கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.1537 கோடி செலவாகியிருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்று பாராளுமன்றத்தில் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில், 2014-2015 ஆண்டில் மத்திய மந்திரிகளின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 509.91 கோடி என்றும், 2013-2014ம் ஆண்டில் ரூ 434.94 கோடி என்றும், 2012-2013-ம் ஆண்டில் ரூ.593.09 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் பணியாளர் அமைச்சகம் தான் அதிகப்பட்சமாக ரூ.351.55 கோடி செலவிட்டுள்ளது. இதே அமைச்சகம் 2013-2014-ம் ஆண்டில் ரூ.289.92 கோடியும், 2012-2013-ம் ஆண்டில் ரூ.453.95 கோடியும் செலவிட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.