17 வயது இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டுகள் சிறைஅரியலூர் அருகே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 17 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள புஜங்காயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அழகுதுரை (38). திருமணமானவர்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அரியலூர் ஜமீன் ஆத்தூரிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்துசென்ற அழகுதுரைக்கு, அங்கு 7 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 17 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 2015-ல், அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அழகுதுரை தவறாக நடந்துகொண்டுள்ளார். இதில், அந்தப் பெண் கர்ப்பமானார்.
இதுகுறித்து புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து அழகுதுரையை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், குற்றம்சாட்டப்பட்ட அழகுதுரைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து அழகுதுரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.