குஜராத்தில் வீனோதம்! மாடுகளுக்கு இந்து முறைப்படி திருமணம்: ரூ.18 லட்சம் செலவு; 700 பேருக்கு அழைப்பு   குஜராத் மாநிலத்தில் இரு மாடுகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. ரூ. 18 லட்சம் மதிப்பில் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ள இத்திருமணத்துக்காக 700 குடும்பத்தினருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


அகமதபாத்தைச் சேர்ந்த பூனம், பகடானாவைச் சேர்ந்த அர்ஜுனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் மாடுகள். இரண்டு மாடுகளின் உரிமையாளர்களும் நாளை (வியாழக்கிழமை) அவற்றுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.


பரசனா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருமணத்துக்காக ரூ.18 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாடுகளின் மதிப்பு அளவிடமுடியாதது என்பதை இச்சமூகத்துக்கு வெளிப்படுத்தவே ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பர்சானா அறக்கட்டளை பொருளாளரும், பூனம் மாட்டின் உரிமையாளருமான விஜய்பாய் இதுதொடர்பாகக் கூறும்போது, “கடந்த 30 ஆண்டுகளாக நான் மாடுகளுடன் வசித்து வருகிறேன். அதனால் அவை எவ்வளவு அன்புக்குரியவை என்பது தெரியும். எனது வாரிசுகளுக்கு இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்துவைப்பேனா எனத் தெரியாது. ஆனால், என் மகளான பூனத்துக்கு இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்து திருமணம் செய்து வைப்பேன். பூனத்துக்காக தங்க நகையும் வாங்கியுள்ளேன். பூனம் என் குடும்பத்தில் ஓர் உறுப்பினர். திருமண விருந்துக்காக எங்கள் தரப்பில் 300 பேர், மூன்று ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருடன் அழகான கோட்டியா பகுதிக்குச் செல்வோம்” எனத் தெரிவித்தார்.


விஜய்பாயிடம் 9 மாத பூனம் தவரி, நான்கு மாடுகளும் வேறு சில செல்லப் பிராணிகளும் உள்ளன.


அர்ஜுன் மாட்டின் உரிமையாளர் தேகிரி கோஸ்வாமி. இவரும், விஜய்பாயும் கோட்டியா பகுதியை திருமணம் நடத்த தேர்வு செய்துள்ளனர். திருமணத்துக்காக ஆமதாபாத்திலிருந்து பிராமண புரோகிதர்கள் அழைத்து வரப்பட்டு, இந்து முறைப்படி மாடுகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. திருமணத்தையொட்டி சிறப்பு யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத் திருமணத்தில் பங்கேற்கவுள்ள 700 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.