மைனர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைப்பு - அஜய் சர்மா(வயது 18) அடையாளம் காணப்பட்டு உள்ளான்.டெல்லியை ஒட்டிய கிரெட்டர் நொய்டாவில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்த அவரது ஆண் நண்பரை போலீஸ் கைது செய்தது.


16-வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் வலுக்கட்டாயமாக தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று உள்ளார். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து உள்ளார் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. இதில் 80 சதவிதம் தீ காயம் அடைந்த சிறுமி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளி அஜய் சர்மா(வயது 18) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளான்.


திங்கள் கிழமை அதிகாலை 2:30 மணியளவில் சிறுமியின் அழுகுரல் மொட்டை மாடியில் கேட்டு உள்ளது. உடனடியாக அவரது பெற்றோர் மேலே சென்று பார்த்து உள்ளனர். சிறுமியின் மீது தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று அவரை காப்பாற்றிஉள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். “சிறுமியின் வீட்டிற்கு நுழைந்த வாலிபர் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தீ வைத்து விட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிஉள்ளனர்.


நாங்கள் மருத்து அறிக்கைக்காக காத்திருக்கிறோம்... சிறுமிக்கு அதிக தீ காயம் உள்ளது,” என்று போலீஸ் அதிகாரி கூறிஉள்ளார்.


கடந்த வருடம் சிறுமியை வாலிபர் பின்தொடந்து தொல்லை கொடுத்ததால் அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. சிறுமியின் உடல் நிலையானது மோசமாக உள்ளது என்றே மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ”சிறுமியின் இரத்தத்தில் பாதிப்பு பரவுவதை தடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம், இது அவருடைய உடல் உறுப்புகளை செயல் இழக்க செய்யும்,” என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.


சிறுமி அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சிறுமியின் வாக்குமூலமானது பெறப்பட்டு விட்டது. அஜய் என்பவனே குற்றவாளி என்று பாதிக்கப்பட்ட சிறுமி கூறிஉள்ளார் என்று ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அஜய் சிறுமியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து உள்ளான் என்று சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டிஉள்ளனர்.


“திங்கள் கிழமை காலை 2:30 மணியளவில் அஜய் என்னுடைய மகளை சந்திக்க வந்து உள்ளான். அவர்கள் மொட்டை மாடியில் சந்தித்து உள்ளனர், அப்போது தான் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சித்து உள்ளான், பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்,” என்று
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.