ரூ. 2 கோடியே 80 லட்சம்! சிக்கியது பறக்கும் படை சோதனையில்



திருச்சி அருகே நடத்தப்பட்ட தேர்தல் பறக்கும் படை சோதனையில்,  சந்தேகத்திற்கிடமான வகையில் பிடிபட்ட பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணத்தான் சாலையில் வேகமாக சென்ற காரை வழிமறித்து சோதனையிட்டனர். சோதனையில், அந்த காரில் 2 இரும்புபெட்டியில் கட்டு கட்டாக  2 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது பணத்திற்கான உரிய ஆதாரங்கள் இல்லை என தெரியவந்தது .

 

இதையடுத்து. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் பணத்தையும்,  உடன்வந்தவர்களையும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தாசில்தார் பவானி நடத்திய முதல் கட்ட விசாரணையில்,  அந்தப்பணத்தை தனியார் வங்கி ஏடிஎம்களில் நிரப்ப கொண்டுவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உரிய ஆதாரங்கள இல்லாததால் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

 

currency 600 1

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.